Thursday, January 23, 2025
HomeLatest Newsதுணிவு ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு...பின்னணி என்ன?

துணிவு ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு…பின்னணி என்ன?

 விஜய்யின் வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன.அத்தோடு வாரிசு, துணிவு படங்களின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.இதனைத் தொடர்ந்து இரண்டு படங்களுமே வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.இந்நிலையில், வாரிசு படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் துணிவு ரிலீஸ் தேதி மாற்றப்படவுள்ளதாக தகவல்  ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகின்றன. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் – அஜித் படங்கள் நேரடியாக பொங்கல் ரேஸில் களமிறங்குவதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. எனினும் அதேநேரம் இருதரப்பு ரசிகர்களும் விஜய், அஜித் இருவரையும் மாற்றி மாற்றி ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களும் எப்போதுமே ஹாட்டாக இருக்கிறது. இந்நிலையில், இரண்டு படங்களின் ட்ரெய்லரும் அடுத்தடுத்து வெளியாகி மாஸ் காட்டின.

அஜித்தின் துணிவு திரைப்பட ட்ரெய்லர் டிசம்பர் 31ம் தேதி மாலை வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் வாரிசு ட்ரெய்லரை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக விஜய்யின் வாரிசு ட்ரெய்லர் நேற்று முந்தினம் மாலை ரிலீஸானது. வாரிசு ட்ரெய்லர் வெளியான உடனே துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை போனிகபூர் அறிவித்தார். அத்தோடு வரும் 11ம் தேதி துணிவு ரிலீஸாகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விஜய்யின் வாரிசு திரைப்படமும் 11ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் – அஜித் ரசிகர்களிடையே பெரிய யுத்தமே தொடங்கியது.

மேலும்  அஜித்தின் துணிவு ட்ரெய்லர் இதுவரை 55 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அதேபோல், வாரிசு ட்ரெய்லர் ஒரேநாளில் 33 மில்லியன் பார்வைகளை கடந்து சம்பவம் செய்து வருகிறது. மேலும் வாரிசு திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்டலாக இருக்கும் என்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதாம். இதனால் துணிவு படத்தின் மீதான வரவேற்பு குறைவதாக சொல்லப்படுகிறது. இதன் காரண்மாக துணிவு படத்தை ஒருநாள் முன்னதாக 10ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். முதல் நாளில் நல்ல கலெக்‌ஷன் கிடைத்துவிட்டால் பாக்ஸ் ஆபிஸில் தப்பித்துவிடலான் என கணக்கு போடுகிறார்களாம்.

மேலும் சத்யம் போன்ற மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில், ஒரு ஸ்க்ரீன் மட்டுமே பெரியதாக இருக்கும். அதனால் அந்த பெரிய ஸ்க்ரீனில் விஜய், அஜித் இருவரில் யாருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதும் விவாதமாக மாறியுள்ளது. இதிலும் விஜய்யின் வாரிசு படத்துக்கு தான் சாதகமான ரிசல்ட் வந்துள்ளதாம். அத்தோடு  துணிவு படத்தை ஒருநாள் முன்பே ரிலீஸ் செய்து கல்லா கட்டிவிடலாம் என போனிகபூர் முடிவு செய்துள்ளாராம். முதலில் கெத்தாக ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு, இப்போது அதில் மாற்றம் செய்வது குறித்து முடிவெடுத்து வருவது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த தகவலை விஜய் ரசிகர்களும் ட்ரோல் செய்து வருகின்றனர். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News