Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஇறந்தது வாக்னர் படை தலைவரே - வெளியான உத்தியோக பூர்வ அறிவிப்பு..!

இறந்தது வாக்னர் படை தலைவரே – வெளியான உத்தியோக பூர்வ அறிவிப்பு..!

ஷியாவின் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு விசாரணைக் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து ரஷியாவின் விசாரணைக் குழு செய்தித் தொடர்பாளர் வெட்லனா பெட்ரென்கோ அறிக்கை வெளியிட்டார்.

அதில், கடந்த புதன் கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் மீட்கப்பட்ட பத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை அனைத்தும் விமானத்தில் பயணம் செய்த பத்து பேருடையது தான் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Recent News