கனடாவில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக மிகவும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோடைக்காலத்தில் கடுமையான காட்டுத் தீயை கனடா எதிர்நோக்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக நெருப்புப் பருவம் தொடங்கியுள்ளதால் கனடாவில் கடுமையான வெப்பமும் வரட்சியும் நிலவுகின்றது.
தற்போது கனடா முழுவதும் 413 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிவதுடன் அவற்றுள் 249 இடங்களில் நெருப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது.
மேற்கே உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து கிழக்குக் கடற்கரையின் நோவா ஸ்கோஷா வரை 3 மில்லியன் ஹெக்டருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு பொசுங்கியுள்ளது.
அத்துடன், கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயின் பாதிப்பை விட அது 12 மடங்கு அதிகமானதாக காணப்படுகின்றது.
அல்பர்ட்டா , நோவா ஸ்கோஷா, கியூபெக் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 26,000 பேர் இடம் பெயர்ந்துள்ளதுடன், அண்மை ஆண்டுகளில் மோசமான மாற்றத்தினால் கனடா அடிக்கடி பாதிக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.