Tuesday, December 24, 2024
HomeLatest Newsகோட்டாவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு!

கோட்டாவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற பாரிய போராட்டத்தின் போது ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்த 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு
பொலிஸ் விசேட குற்றப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி கடந்த ஜூலை மாதம் பாரியளவில் நாட்டில் போராட்டங்கள் வெடித்திருந்த நிலையில் மக்கள் ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

இதன் காரணமாக கோட்டாபய ராஜபக்ச சுரங்கம் வழியாக அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News