Thursday, January 23, 2025
HomeLatest Newsசமபோஷவிற்கு தடை விதித்த நீதிமன்றம்...!

சமபோஷவிற்கு தடை விதித்த நீதிமன்றம்…!

சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொறவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இந்தப் பொருட்களைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியதில் அஃப்லாடோக்சின் அளவு அதிகமாக இருந்ததை வெளிப்படுத்தியதாக நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே, மொறவக்க பிரதேசத்துக்கு உட்பட்ட இப்பொருளின் விற்பனையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யுமாறும், தற்போது சந்தையில் உள்ள பொருட்களின் இருப்புகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Recent News