Thursday, December 26, 2024
HomeLatest Newsஓராண்டுக்குள் நாடு முன்னேறும்! போராட்டக்காரர்கள் உறுதி

ஓராண்டுக்குள் நாடு முன்னேறும்! போராட்டக்காரர்கள் உறுதி

மூன்று நூற்றாண்டுகளின் பின்னர் இலங்கை வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

மக்கள் சக்தியால் துப்பாக்கிகள் அடக்கப்பட்டது, இராணுவமும், காவல்துறையும் மக்களுடன் இணைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்து யார் ஆட்சி செய்தாலும் இந்த நாட்டை பின்னோக்கிக் கொண்டு செல்ல இடமளிக்க மாட்டோம்.

ஒரு வருடத்தில் இந்த நாட்டை மிகவும் முன்னேறிய இடத்துக்கு கொண்டு வருவதற்கு நாம் உழைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்.

Recent News