Tuesday, December 24, 2024
HomeLatest Newsநாட்டிற்கு சரியான கோட்பாட்டு ரீதியான வேலைத் திட்டம் தேவை- சஜித் தெரிவிப்பு!

நாட்டிற்கு சரியான கோட்பாட்டு ரீதியான வேலைத் திட்டம் தேவை- சஜித் தெரிவிப்பு!

நமது நாட்டிற்கு சரியான கோட்பாட்டு ரீதியான வேலைத் திட்டம் தேவை என்றும், இந்த கோட்பாட்டை நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும், இந்நாட்டில் எப்போதும் ஊசலாடியது தீவிர முதலாளித்துவம் அல்லது தீவிர சோசலிசமாகும் என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி மூன்றாவது பாதையான மனிதநேய முதலாளித்துவத்தை நம்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சோசலிசம், பாட்டாளி வர்க்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றி பேசும் தரப்புகள் அதிகாரத்திற்காக தங்கள் கொள்கைகளைக் காட்டிக் கொடுத்துள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியான கட்சி என்ற வகையில், மனிதாபிமான முதலாளித்துவத்தை எப்போதும் நம்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவ்வாறு உருவாகும் செல்வத்தின் பங்குதாரர்களாக நாட்டு மக்களை ஆக்குவதாகவும், அதுவே சரியான நடுநிலையான மத்தியஸ்தமான பாதை எனவும், அதுவே நாட்டுக்கான ஒரே தீர்வும் பதிலுமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒரு அரசாங்கத்தால் செல்வத்தை உருவாக்க முடியாது எனவும், சமூக சந்தைப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட தேவை மற்றும் வழங்கலை அடிப்படையாகக் கொண்ட சந்தை சக்திகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியாண்மைகளுக்கு முன்னுரிமையளிப்பதே செல்வத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழியாகும் எனவும், இந்த முதலாளித்துவம் ஒருசிலரை போஷிப்பதானதாகவே அல்லது நட்பு வட்டார முதலாளித்துவமாகவோ இருக்கக் கூடாது என்றும், நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவானதாக அது அமைய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கு திட்டங்களை வகுத்துக் கொண்டிருப்பவர்களிடம் சர்வதேச நாணய நிதியத்தைத் தவிர வேறு வழிகள் உள்ளதா என்று கேட்க வேண்டியுள்ளதாகவும், தாம் பார்ப்பது போல், சர்வதேச நாணய நிதியத்தை சரியாக கையாள்வதன் மூலம் நாடு முகம்கொடுக்கும் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள முடியும் என்றாலும்,சர்வதேச நாணய நிதியத்தை தமதமாக அணுகியதால் வலுவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை எட்ட முடியாது போனதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமை குறித்து எதிர்க்கட்சியிடம் விமர்சனங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் “THE BLUE PRINT” பொருளாதார மாநாடு நேற்று(29) காலி மாவட்டத்தை இலக்காகக் கொண்டு இடம்பெற்றது.

Recent News