Monday, January 27, 2025
HomeLatest Newsஇலங்கையில் 100,000 கிலோ பால்மாவுக்கு ஏற்பட்ட நிலை...!

இலங்கையில் 100,000 கிலோ பால்மாவுக்கு ஏற்பட்ட நிலை…!

இறக்குமதி செய்யப்பட்ட பால் மா தொகையொன்று நுகர்வுக்குத் தகுதியற்றமையினால் கால்நடை தீவனமாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 4 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட 100,000 கிலோ கிராம் பால் மாவை கால்நடை தீவனமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுங்க அதிகாரிகள் குழு ஒன்றினால் கொள்கலன்களை விடுவிப்பதற்காக தரகு பணம் கோரப்பட்டுள்ள காரணத்தால் குறித்த அதிகாரிகள் கொள்கலன்களை விடுவிக்காமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், சுங்க ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவிக்கையில்,

குற்றச்சாட்டை நிராகரித்த அவர், பால் மா கொள்கலன்களை விடுவிப்பதில் சிக்கல் இருப்பின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினூடாக தீர்வு காண வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் உள்ளுர் பால் மா நிறுவனங்களை மூடுவதற்கான சதிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவை சுங்கச்சாவடியில் இருந்து விடுவிக்காமல் மோசடியாளர்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Recent News