Thursday, January 23, 2025
HomeLatest Newsதனது தயாரிப்பொன்றை அவசரமாகத் திரும்பப் பெறும் கோகோ கோலா நிறுவனம்: என்ன பிரச்சினை?

தனது தயாரிப்பொன்றை அவசரமாகத் திரும்பப் பெறும் கோகோ கோலா நிறுவனம்: என்ன பிரச்சினை?

கோகோ கோலா நிறுவனம், தனது தயாரிப்பொன்றை அவசரமாகத் திரும்பப் பெற்று வருகிறது.

Coca-Cola Zero என்னும் தயாரிப்புகளடக்கிய பெட்டிகள்தான் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.

ஒருதரப்பினருக்கு அபாயம் என தகவல்;

இந்த தயாரிப்பில் சர்க்கரை இல்லை என்று விளம்பரம் செய்யப்படும் நிலையில், தவறுதலாக சில கேன்களில் வழக்கமான அளவு சர்க்கரை கொண்ட கோகோ கோலா நிரப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து அவை திரும்பப் பெறப்படுகின்றன.  

என்ன பிரச்சினை ஏற்படக்கூடும்?

அதாவது இந்த கோகோ கோலா ஜீரோ என்னும் தயாரிப்பில் சர்க்கரை இருக்காது என நம்பி மக்கள் வாங்குகிறார்கள். ஆக, நீரிழிவு பிரச்சினை அல்லது உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் இந்த பானத்தைக் குடித்தால், அவர்களுக்கு பிரச்சினை ஏற்படலாம்.

ஆகவே, 24 x 330ml அளவுகொண்ட, 2023 அக்டோபர் 31 மற்றும் 2023 நவம்பர் 30 காலாவதி திகதிகள் கொண்ட கோகோ கோலா கேன்கள் கொண்ட அட்டைப்பெட்டிகளை மொத்தமாக வாங்கியவர்கள், அதை திருப்பிக் கொடுக்குமாறும், அதற்கு பதிலாக கோகோ கோலா ஜீரோ தயாரிப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Recent News