கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், உக்ரேனின் மைகோலைவ் நகரில், போரைக் குறிக்கும் வகையிலான கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
போர் காலங்களில், தாமும் தமது தளவாடங்களும் பிறர் கண்ணில் படாதவாறு செய்யப் படைவீரர்கள் உருமறைப்பு வலைகளை பயன்படுத்துவர்.
அந்த உருமறைப்பு வலைகளை தயாரித்து கிறிஸ்மஸ் மரத்தை உருவாக்கியுள்ள மைகோலைவ் நகர மக்கள், பண்டிகை முடிந்ததும் இவை ரஷ்ய படைகளை எதிர்த்து போரிடும் உக்ரேன் வீரர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.