இன்றைய காலத்தில் பலரும் ஒயினை விரும்பி ருசிக்கிறார்கள், காரணம் இது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதாலாகும்.
அதுவும் ரெட் ஒயின் அல்சீமர் வராமல் தடுக்கும் என்றும், இளமையாக வைத்திருக்க உதவும் என்றும் பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சீனாவில் பிரபலமான உள்ள Mice Wine பற்றி உங்களுக்கு தெரியுமா?
சீனா மற்றும் கொரிய நாடுகளில் மிகப் பிரபலமான இந்த ஒயின், எலிக்குட்டிகளை கொன்று தயாரிக்கப்படுகிறது.
அரிசியை ஊறவைத்து கிடைக்கும் Rice Wineல், குட்டி எலிகளை போட்டு தயாரிக்கின்றனர், அதாவது பிறந்து மூன்று நாட்களேயான கண்களை கூட திறக்க முடியாத எலிக்குட்டிகள் தான் இந்த ஒயினிற்கு ருசியை தருகின்றதாம் .
கிட்டத்தட்ட அந்த பாட்டிலை 12 மாதங்களுக்கு அப்படியே வைத்துவிடுவார்கள், இதன்பின்னர் தயாராகும் ஒயின் ஆஸ்துமா, கல்லீரல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறதாம்.
சீனர்கள் ஒயினை மட்டுமின்றி அந்த எலியையும் ருசித்து சாப்பிடுவார்களாம் .
பிற செய்திகள்