கொரோனா தொற்று ஏற்பட்டதன் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக கசகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார் சீன அதிபர் “ஜி ஜின்பிங்”.
எதிர்வரும் 15ம் திகதி மேற்கொள்ளவுள்ள இந்த பயணம் சீனாவிற்கும் கசகிஸ்தானுக்கும் இடையில தொடரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெறவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனா தனது கிழக்கு பகுதி நாடான கசகிஸ்தானுக்கு உலோகங்கள் மற்றும் கனிமங்களை தொடர்ந்து ஏற்றுமதி செய்து வருகின்ற நிலையில் தற்போது இடம்பெறவுள்ள சீன அதிபரின் பயணம் மேலும் பல பொருளாதார பரிமாற்ற ஒப்பந்தங்களை மேற்கொள்ள வழிவகைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.