Thursday, May 2, 2024
HomeLatest Newsஉலகின் முதல் "மடிக்கக்கூடிய ஐபோனை" உருவாக்கிய சீனர்!

உலகின் முதல் “மடிக்கக்கூடிய ஐபோனை” உருவாக்கிய சீனர்!

சீன யூடியூபர் ஒருவர் உலகின் முதல் “மடிக்கக்கூடிய ஐபோனை” உருவாக்கியதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐபோனின் உள் கூறுகள் மற்றும் Motorola Razr-ன் மடிக்கக்கூடிய கீலைப் பயன்படுத்தி இந்த சாதனத்தை உருவாக்க அவர் பலமுறை முயற்சி செய்துள்ளார். 

மடிக்கக்கூடிய ஐபோனை எப்படி உருவாக்கினார் என்பதை விளக்கி அந்த நபர் தனது யூடியூப் சேனலில் முழு செயல்முறையையும் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

வீடியோவில், அவர் வெவ்வேறு சாதனங்களிலிருந்து பாகங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை மீண்டும் அசெம்பிள் செய்து தனது சொந்த கஸ்டம் ஃபோனை உருவாக்குகிறார்.

அவர் ஐபோன் X-லிருந்து உள் கூறுகளை அகற்றி, அவற்றை மடிக்கக்கூடிய மோட்டோரோலா ரேஸ்ர் சேஸின் உள்ளே அடக்கியுள்ளார்.

வீடியோ சீன மொழியில் இருந்தாலும், ஆங்கில வசனங்கள் உள்ளன. இதனை உருவாக்கும் செயல்முறை மிகவும் கடினமானதாகவும் மற்றும் அதிக நேரத்தையும் எடுத்துக்கொண்டுள்ளது.இதனை உருவாக்கும் முயற்சியில், திரைகளுக்காக பல போன்களை உடைத்து வீணடித்துள்ளார். முடிந்தவரை ஐபோனின் அசல் சாதனங்களிலிருந்து பல பகுதிகளைப் பயன்படுத்தியுள்ளார்.

பிற செய்திகள்

Recent News