கடந்த சில மாதங்களாக சீனாவின் பல பகுதிகளில் கொரோனாவின் புதிய அலை மிகத் தீவிரமாக பரவி வருகின்றது.
இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் கடுமையாக போராடி வருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் கடந்த சில வாரங்களாக சீனப் பிரஜைகள் அதிக எண்ணிக்கையில் கனடாவை நோக்கி படையெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று அலை தலைதூக்கியுள்ளதன் காரணமாகவே இவ்வாறு சீனர்கள் கனடா நோக்கி வருகை தர தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கனடாவில் குடியேறுவதற்கு அதிக எண்ணிக்கையிலான சீனர்கள் விண்ணப்பித்து வருவதாக கனேடிய அரசாங்க புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் அரசாங்கத்தினால் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதன் விளைவாக சீனர்கள் கனடாவில் குடியேற முனைப்பு காட்டி வருவதாக குடிவரவு சட்டத்தரணி Ryan Rosenberg தெரிவிக்கின்றார்.
சீனாவில் தொடர்ச்சியாக அமுல்படுத்த வரும் முடக்க நிலைமைகளால் சீன மக்கள் தங்களது குடும்பங்களுடன் வேறு நாடுகளை குடியேறுவதற்கு நாட்டம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.