Thursday, January 23, 2025
HomeLatest Newsவிமான விபத்தில் சிக்கிய சிறுவர்கள்...!40 நாட்களின் பின் மீட்பு..!

விமான விபத்தில் சிக்கிய சிறுவர்கள்…!40 நாட்களின் பின் மீட்பு..!

தென்னமெரிக்காவில் உலகப் புகழ்பெற்ற அமேசன் காடு அமைந்துள்ளது. எனினும் பிரேசில் , கொலம்பியா வரை இக் காடு வியாபித்துள்ளது.

இந்நிலையில் அமேசன் காட்டைக் கடந்து பயணித்த விமானமொன்று கடந்த மே மாதம் 1 ம் திகதி விபத்தில் சிக்கியது.

விமானி , 4 குழந்தைகளின் தாய் , மற்றும் இன்னொரு நபர் உயிர் தப்பிய நிலையில் 4 குழந்தைகளும் உயிரிழந்திருந்தனர்.

இதே வேளை குழந்தைகள் உயிருடன் இருக்கும் சம்பவம் அறிந்த நிலையில் அவர்களைத் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 40 நாட்களுக்குப் பின் தேடுதல் வேட்டையின் நிறைவில் குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
பழங்குடியினரான அக் குழந்தைகளுக்கு காட்டின் தன்மை பற்றி பெற்றோர் விளக்கம் கொடுத்து வளர்த்திருந்தமையால் அங்குள்ள செடி , விதைகளை இனங்கண்டு சுமார் 40 நாட்கள் வரை உயிர் பிழைத்துள்ளனர்.

இத்துடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட குழுவைக் கண்டதும் அக் குழந்தைகள் “என் அம்மா இறந்துவிட்டார் எனக்குப் பசிக்கிறது” என்று கூறியுள்ளனர். குறிப்பாக ஹீய்டோட்டோ பழங்குடியினரைச் சேர்ந்த குறித்த குழந்தைகள் நால்வரும் முறையே 13 , 9 , 5 மற்றும் ஒரு வயதாகும்.

தேடுதல் வேட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு குழந்தைகளும் மீட்புக் குழுவால் மீட்கப்பட்டு விமானம் மூலம் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.

Recent News