Tuesday, December 24, 2024
HomeLatest Newsகொதிக்கும் எண்ணெய் கொட்டி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

கொதிக்கும் எண்ணெய் கொட்டி பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

பொங்களூரில் கொதிக்கும் எண்ணெய் கொட்டியதால் தீக்காயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் பெங்களூர் புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை அருகே எம்.வி. லே-அவுட்டில் கடந்த மாதம் நவம்பர் 25ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் ரவி மற்றும் பிரதிமா என்ற தம்பதிக்கு பிறந்த 3 வயது ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

சம்பவ தினத்தன்று சமையல் அறையில் பிரதிமா பாத்திரத்தில் கொதிக்கும் எண்ணெயை வைத்திருந்தார். இதனை கவனிக்காமல் சமையல் அறையில் விளையாடிய குழந்தை பாத்திரத்தை பிடித்து இழுத்ததாக தெரிகிறது.

இதனால் குழந்தையின் உடலில் கொதிக்கும் எண்ணெய் கொட்டியதால் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடியது. உடனடியாக தங்களது குழந்தையை ரவி, பிரதிமா விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் அதிகாலையில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.தங்களது குழந்தையின் உடலை பார்த்து ரவி, பிரதிமா கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

இதுகுறித்து ஒசக்கோட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Recent News