ஜப்பான் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்ராலின் ஒசாகா நகரிலுள்ள கோமாட்சா நிறுவனததின் உற்பத்தித் தொழிற்சாலையை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த நிறுவனமானது தூர்வாரப் பயன்படுத்தப்படும் செயின் வண்டி உட்பட தொழில் நுட்ப இயந்திரங்களை உற்பத்தி.செய்து வருகின்றது
இந் நிலையில் அங்கு இடம்பெற்ற ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடாத்தப்பட்ட மாபெரும் மாநாட்டில் கலந்து கொண்டு அடுத்த வருட ஆரம்பத்தில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததுடன் , நிறுவன முதலீடுகளை தமிழ் நாட்டில் வித்திடுமாறும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டேசல் சேப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்குமிடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந் நிறுவனமானது உலகளவில் கட்டுமானமம் மற்றும் சுரங்க உபகரணத் தயாரிப்பில் முன்னனியில் திகழ்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.