Friday, May 3, 2024
HomeLatest Newsஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக அவ்வப்போது ஏற்றத்தினை கண்டாலும், மொத்தத்தில் சரிவினை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளமையினால் தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சர்வதேச அளவில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில் தங்கத்தின் தேவையானது குறையலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

குறிப்பாக தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் சீனாவில் தேவை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.

இதற்கமைய, சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்து, 17.665 டொலராக காணப்படுகின்றது. வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.

புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது

Recent News