Tuesday, December 24, 2024
HomeLatest Newsநாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

நாட்டில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது.

கடந்த 2 மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்றைய தினம் சற்று வீழ்ச்சியடைந்தது.

இந்நிலையில், இன்றைய விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 192,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 176,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News