Thursday, January 23, 2025
HomeLatest Newsதங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலகளவில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு தொடர்ந்து வருவதால், தங்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கமைய, வார இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,853 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதென உலக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக தங்கம் விலை உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை ரூபாவின் பெறுமதியை கடந்த இரண்டு வாரங்களாக நிலையானதாக பேணி வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி முதல் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 364 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News