Tuesday, December 24, 2024
HomeLatest Newsபண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்..!

பண்டிகைக் காலத்தில் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்..!

பண்டிகைக் காலத்தில் சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்ணான்டோ இது தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர்  கூறியுள்ளார்.  

தற்போது கட்டுப்பாட்டு விலையில் உள்ள பொருட்களின் விலையை எதிர்வரும் ஜனவரி மாதம்வரை பேணுமாறும் அவர் குறிப்பிட்டார். 

ஏற்கனவே உணவு இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடி பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தற்போதுள்ள விலையை விட குறைந்த விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய முடிந்தால் அந்தச் சலுகையை பொதுமக்களுக்கு வழங்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அமைச்சின் செயலாளர் கொடிகார தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அவர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

பிற செய்திகள்

Recent News