Saturday, January 11, 2025
HomeLatest Newsகனடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!பிரதமரின் மக்கள் ஆதரவில் வீழ்ச்சி..!

கனடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!பிரதமரின் மக்கள் ஆதரவில் வீழ்ச்சி..!

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், பியே பொலியேவ் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு மக்களை ஆதரவு கூடுதலாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பியே பொலியேவின் தலைமையிலான கட்சிக்கு 37 வீதமான மக்கள் ஆதரவு காணப்படுவதாகவும், பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான ஆளும் லிபரல் கட்சிக்கு 32 வீதமான மக்கள் ஆதரவு காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டின் ஆரம்பத்துடன் ஒப்பீடு செய்கின்ற பொழுது பியே பொலியேவின் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மக்கள் ஆதரவு நான்கு வீதத்தினால் அதிகரித்து காணப்படுகின்றது.

இந்நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லிபரல் கட்சிக்கான மக்கள் ஆதரவில் சரிவு ஏற்பட்டுள்ளதாக குறித்த கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News