Saturday, January 25, 2025
HomeLatest Newsஉடைந்து வீழ்ந்த ரஷ்ய பாலம்!

உடைந்து வீழ்ந்த ரஷ்ய பாலம்!

நேற்றைய தினம் நடைபெற்ற truck வெடிப்பு ஒன்றில் ரஷ்யாவையும் கிரிமியாவையும் இணைக்கும் பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் ரஷ்யாவில் இருந்து உக்ரைனிற்கு வீரர்களை அனுப்பும் பிரதான பகுதி தடைப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பில் taman வளைகுடாவிற்கு அருகே truck ஒன்று வெடித்ததில் மொத்தம் 7 ட்ரெயின் பெட்டிகள் வெடித்து சிதறியுள்ளன.

இதனாலேயே பாலம் வெடித்து உள்ளது. குறித்த truck குண்டு வைத்து வெடிப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இது தொடர்பான குற்றவியல் விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறும் கேட்டுள்ளது.

இதுவரையில் இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாகியுள்ளதாக அறியப்பட்டுள்ளது. வெடித்த truck இற்கு அருகே சென்ற காரில் இருந்து உயிரிழந்த நிலையில் ஒரு பெண் மற்றும் ஆணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Recent News