Friday, November 22, 2024
HomeLatest Newsஎலோன் மஸ்க்கின் நிறுவனத்திற்கு தேர்வான சிறுவன்...!குவியும் பாராட்டுக்கள்..!

எலோன் மஸ்க்கின் நிறுவனத்திற்கு தேர்வான சிறுவன்…!குவியும் பாராட்டுக்கள்..!

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணி செய்வதற்காக 14 வயது சிறுவன் தேர்வு செய்யப்பட்டுள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பகுதியைச் சேர்ந்த 14 வயதான கைரான் குவாசி என்ற சிறுவனே இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கைரான் குவாசி, சிறு வயது முதலே மிகுந்த புத்தி அறிவுக் கூர்மையுடையவராக இருந்தமையால் 11 வயதிலேயே அமெரிக்காவின் கைரான் கிளாரா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

அது மட்டுமன்றி, அவரது திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளவும் அவருக்கு பல்கலைக்கழகம் அனுமதியளித்துள்ளது.

ஆராய்ச்சிக்குப் பின்னர் இன்டெல் லேப்சா AI (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) ஆராய்ச்சி கூட்டுறவு உறுப்பினராக கைரான் பயிற்சி பெற்றுள்ளார்.

இதையடுத்து, 2022 ஆம் ஆண்டில், சைபர் நுண்ணறிவு நிறுவனமான பிளாக்பெர்ட் AI-இல் இயந்திரக் கற்றல் பயிற்சியாளராக நான்கு மாதங்கள் கடமையறியுள்ளார்.

இவ்வாறான சூழலிலே, இந்த சிறுவனுக்கு எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினீயரிங் பிரிவில் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கைரான் குவாசி, தனது அடுத்த நகர்வு ஸ்பேஸ் எக்ஸ் என்றும் உலகிலேயே மிகவும் சிறப்பான நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இணைந்து ஸ்டார்லின்க் இன்ஜினீயரிங் டீம் உடன் பணியாற்ற உள்ளதாகவும் சமூக ஊடகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறந்த நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது வயதை கருத்திற் கொள்ளாது திறமையை ஆய்வு செய்து பணியில் சேர்த்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் 14 வயதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணிக்கு தெரிவான இந்த சிறுவனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News