Saturday, January 18, 2025
HomeLatest Newsஜப்பானில் மீட்கப்பட்ட இலங்கையரின் சடலம்

ஜப்பானில் மீட்கப்பட்ட இலங்கையரின் சடலம்

ஜப்பானின் டோக்கியோ நகரின் வடகிழக்கு மாகாணமான இபராக்கியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர் 45 வயதான உபுல் ரோஹன தர்மதாச என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது உடலின் இடது தோள்பட்டையில் இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்டதாக இபாரக்கி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இரத்தக் கறை படிந்த கத்தி ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இலங்கையரது மரணம் தொடர்பில் இபராக்கி மாநில பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recent News