Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉலகின் மிகப்பெரிய ஓவியம் !! FIFA படைத்த புதிய சாதனை!

உலகின் மிகப்பெரிய ஓவியம் !! FIFA படைத்த புதிய சாதனை!

கித்தானில் (Canvas) செய்யப்பட்ட உலகின் ஆகப் பெரிய ஓவியம் என்ற கின்னஸ் (Guinness) உலகச் சாதனையைக் கட்டார் படைத்துள்ளது.

9,652 சதுர மீட்டர் அதாவது ஒரு காற்பந்துத் மைதானத்திற்கு சமமான பரப்பளவில் ஓவியம் உள்ளது.

அது குறித்து பு Gulf Times செய்தி நிறுவனம் தகவல் வழங்கியது.

கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு ஏற்ற வகையில் குறித்த ஓவியம் காற்பந்தை ஒட்டி அமைந்துள்ளது.

ஓவியத்தில் காற்பந்தின் வரலாறு மட்டுமில்லாமல் அரேபியக் கலாசாரமும் மற்ற கலாசாரங்களும் சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கலைஞர் இமாத் சலெஹி ( ஐஅயன ளுயடநாi) கூறியுள்ளார் .

ஓவியத்தைச் செய்துமுடிக்க 5 மாதங்களுக்கு அதிகமான நேரம் எடுக்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும் 18 மணி நேரம் வரை ஓவியத்தில் செலவழித்ததாக சலெஹி கூறினார்.

இந்த ஓவியம் FIFA  உலக கோப்பையை காண்பதற்கான ஆர்வத்தை மீண்டும் மேலும் தூண்டியுள்ளது.

Recent News