இஸ்ரேலிய நகரமான ஈலாட்டில் வெடித்த ட்ரோனுக்கு ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு, ஈராக் போராளிகள் பொறுப்பேற்றுள்ளனர்.”பொருத்தமான ஆயுதங்களைப் பயன்படுத்தி” இஸ்ரேலில் ஒரு “முக்கிய தளத்தை தாக்கியதாக குழு ஒரு அறிக்கையில் கூறியது, இது தொடர்பான மேலதிக
விவரங்கள் எதனையும் அவர்கள் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் கிழக்கிலிருந்து ஏவப்பட்ட ஒரு பறக்கும் பொருள் ஈலாட்டில் உள்ள ஒரு கட்டிடத்தைத் தாக்கியதாகவும், தெற்கே உள்ள நகரத்தில் சைரன்கள் ஒலித்ததாகவும் , ஆனால் வான் பாதுகாப்புகளால் எந்த இடைமறிப்பும் இல்லை என்றும் இஸ்ரேலிய இராணுவம் இன்று முன்னதாக கூறியது.காசாவில் இஸ்ரேல் நடத்திய போரின் போது ஏமனில் ஈரானிய இணைந்த ஹவுத்தி இயக்கத்தின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு ஈலாட் பலமுறை இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.