Tuesday, December 24, 2024
HomeLatest Newsசிறுவர்கள் மீது மர்ம நபரின் தாக்குதல்..!நேரில் சென்று நலம் விசாரித்த ஜனாதிபதி..!

சிறுவர்கள் மீது மர்ம நபரின் தாக்குதல்..!நேரில் சென்று நலம் விசாரித்த ஜனாதிபதி..!

மர்ம நபர்களின் தாக்குதலிற்கு இலக்கான சிறுவர்களை அந்நாட்டின் ஜனாதிபதி நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

பிரான்சில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

குறித்த நபரின் தாக்குதலில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள், 2 பெரியவர்கள் என 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தாக்குதல் தெடர்பாக தகவலறிந்து பூங்காவிற்கு விரைந்த பொலிசார் மர்மநபரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலிற்கு இலக்காகி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் உடன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Recent News