Friday, January 17, 2025
HomeLatest NewsWorld Newsஉக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய தாக்குதல் - பற்றி எரியும் கீவ் நகரம்..!

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய தாக்குதல் – பற்றி எரியும் கீவ் நகரம்..!

உக்ரைன் ரஷ்யா போர் இரண்டு ஆடுகளை கடந்தும் நடந்து வருகின்ற நிலையில், ரஷிய படைகள் தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அவர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போரிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு அருகே சோலாமியன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மீது இன்று ரஷியா ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் நடத்திய தாக்குதலில் அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் மேல்தளம் தீப்பிடித்து எரிந்தது.

இந்த சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News