உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியதோடு இப்போரில் ரஷிய ராணுவ வீரர்கள் ஏராளமானோர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஏற்கனவே உக்ரைன் போரில் ரஷிய படைகளுக்கு உதவிய தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு ரஷிய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முயன்றது. பின்னர் பெலாரஸ் அதிபரின் சமரசத்தால் கிளர்ச்சியை கைவிட்டது. இதன் மூலம் புதினுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகிய நிலையில் புதினின் உத்தரவுக்கு ரஷிய ராணுவ வீரர்கள் அடி பணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.