Friday, January 24, 2025
HomeLatest Newsமுதல் வெற்றியை பதிவு செய்த ஆர்ஜன்டினா அணி!

முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்ஜன்டினா அணி!

ஃபிபா உலக கிண்ண காற்பந்தாட்ட தொடரில் மெக்ஸிக்கோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ஜன்டினா அணி 2க்கு பூச்சியம் என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் 64வது நிமிடத்தில் ஆர்ஜன்டினா அணியின் லயனல் மெஸ்ஸி கோல் ஒன்றை அடித்தார்.

அவரை தொடர்ந்து என்சோ பெர்னாண்டஸ் 87வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார்.

இதேவேளை, குழு “டி” பிரிவில் பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பிரான்ஸ் அணி 2 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே 61ம் மற்றும் 86வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார்.

டென்மார்க் அணியின் எண்ட்ரேயஸ் கிறிஸ்டென்சன் 68வது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்றார்.

ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் நேற்றிரவு (26) நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற நடப்பு சம்பியன் பிரான்ஸ் முதலாவது அணியாக இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

இதேவேளை, ஜப்பான் மற்றும் கோஸ்ட்டா ரிக்கா ஆகிய அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 அளவில் இடம்பெறவுள்ளது.

Recent News