Tuesday, December 24, 2024
HomeLatest Newsமேகக்கூட்டத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி..!புகைப்படம் வெளியிட்டு நாசா அசத்தல்..!

மேகக்கூட்டத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி..!புகைப்படம் வெளியிட்டு நாசா அசத்தல்..!

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த, நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா, 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜேம்ஸ் வெப் என்ற பிரமாண்ட தொலைநோக்கியை 75 ஆயிரம் கோடி செலவில் விண்ணில் செலுத்தியது.

அதையடுத்து, இந்த தொலைநோக்கி பிரபஞ்சத்தின் பிறப்பிடம் குறித்த 4 புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.

இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இந்த புகைப்படங்களே பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சியாக காணப்படுகின்றன.

அந்த வகையில், அந்த புகைப்படங்களை வெளியிடப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை நாசா தற்போது கொண்டாடி வரும் நிலையில் அதன் ஒருபகுதியாக மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படமானது, ரோ ஒபியுச்சி மேகக்கூட்டத்தில் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியை காட்டி நிற்கின்றது.

அதில், சுமார் 50 இளம் நட்சத்திரங்கள் காணப்படுவதாகவும், அவை அனைத்தும் சூரியனை போன்ற நிறை உடையவை எனவும் நாசா தனது அறிக்கையில் கூறியுள்ளமை குறிப்பிட்டுள்ளது.

Recent News