இந்திய மாணவி ஒருவரை அப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தொடர்பு கொண்டு பாராட்டியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான அப்பிள் ஸ்விப்ட் ஸ்டுடென்ட்ஸ் போட்டி உலகம் முழுவதும் நடைபெற்ற நிலையில் அதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அஸ்மி ஜெயின் என்ற மாணவியும் பங்குபற்றியுள்ளார்.
30 நாடுகளைச் சேர்ந்த 375 மாணவர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் இவர் உருவாக்கிய Eye Track என்ற செயலி அதிகளவாக பாராட்டுகளை பெற்றுள்ளதுடன் அஸ்மி வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அஸ்மி தனது தோழியின் உறவினருக்கு உதவும் நோக்கில் இந்த செயலியை கண்டுபிடித்தாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இவரது கண்டுபிடிப்பின் மூலம் பார்வை குறைபாடு உடையவர்களின் கண் செற்பாட்டை கண்காணித்து அதற்கேற்ப அவர்களுக்கு சிகிச்சை அளித்து பார்வையை மீட்க உதவ முடியும்.
இந்நிலையில், அப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மாணவியின் கண்டுபிடிப்பை வியந்து பாராட்டியதுடன், அவருடன் Video call இல் தொடர்பு கொண்டு கலந்துரையாடியும் உள்ளார்.
இது தொடர்பாக டிம் குக்,அஸ்மி ஜெயினின் கண்டுபிடிப்பானது இந்தியாவின் படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தை எடுத்துக்காட்டுகின்றது என்று தெரிவித்துள்ளார்.
அது மட்டுமன்றி, மக்களின் ஆரோக்கியம் சார்ந்த கண்டுபிடிப்புகள், அவர்களிடையே ஆழமான தாக்கத்தை உண்டாக்கும் என்றும் இந்த தாக்கத்தை ஏற்படுத்த அஸ்மி ஜெயின்முன்னதாகவே தயாராகி விட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.