உலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் TikTok தளத்தில் தற்பொழுது பிரபலமாகப் பின்பற்றப்படும் சாகசத்தில் ஈடுபட்ட நால்வர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, அதிவேகமாகச் செல்லும் படகிலிருந்து குதிப்பதே அந்த சவாலாகவும்.
கடந்த 6 மாதங்களில், அந்தச் சவாலில் ஈடுபட்டவர்கள் கடலில் குதித்ததும் கழுத்து முறிபட்டு மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று உயிர்க்காப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அந்த வரிசையில், இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒருவர் அதிவேகப் படகிலிருந்து குதித்து உயிரிழந்தார். அதன் பின்னர் மூவர் அதே போன்று உயிரிழந்துள்ளார்.
அதாவது, TikTok இல் #boatjumping என்று தேடினால் அந்தச் சாகசத்தில் ஈடுபட்டவர்களின் காணொளிகளைக் பபார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அந்த சவால் பல வருடங்களாகப் பின்பற்றப்பட்டாலும் இவ்வாண்டின் தொடக்கத்திலேயே அது பிரபலமடைந்துள்ளது.
இந்த சாகசத்தில் ஈடுபாடு பொழுது, படகின் வேகமும் குதிப்பவர்கள் தண்ணீரைத் தொடும் விதமும் தரையில் குதிப்பதைப் போன்ற விளைவுகளை உண்டாக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் தலையும் கழுத்தும் பாதுகாக்கப்படவில்லை என்றால் குதிப்பவர்கள் உயிரிழக்கலாம் அல்லது அவர்களின் உடல் நிரந்தரமாகச் செயலிழந்து போகலாம் என்று கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.