இந்தியா 27 ஆண்டுகளிற்கு பின்னர் 2023 ஆம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் 71 ஆவது உலக அழகி போட்டியை அது நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி இந்த ஆண்டே இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், போட்டி நடைபெறும் திகதி மற்றும் இடம் தொடர்பாக இதுவரை முடிவு செய்யப்படவில்லை எனவும்,130 ற்கும் அதிகமான நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் எனவும்
கூறப்பட்டுள்ளது.
ஒரு மாத காலம் வரை இடம்பெறும் இந்த போட்டியில், போட்டியாளர்களின் சிறப்பைக் கண்டறிய பல போட்டிகள் வைக்கப்படவுள்ளது.
தற்போதைய உலக அழகியான போலந்து நாட்டைச் சேர்ந்த கராலினா பிலாவ்ஸ்கா, இவ்வருடம் இடம்பெறவுள்ள உலக அழகி போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக இந்தியா சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கராலீனா , 71 ஆவது உலக அழகி இறுதிப் போட்டியை இந்தியா நடத்துவதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறுதியாக 1996 ஆம் ஆண்டு இந்தியாவில் உலக அழகி போட்டி நடத்தபட்டுள்ள நிலையில், அந்த ஆண்டு ரீட்டா ஃபரியா என்பவர் மூலம் உலக அழகி பட்டத்தையும் இந்தியா தன்வசமாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.