சிங்கப்பூா் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் அந்தப் பொறுப்பை இன்று ஏற்கிறாா்.
சிங்கப்பூரின் 8-ஆவது அதிபரும், முதல் பெண் அதிபருமான ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடா்ந்து, அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த மாதம் 1-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தர்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 லட்சம் வாக்குகளில் 17.46 லட்சம் அதாவது 70.4 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து, சிங்கப்பூரின் 9-ஆவது அதிபராக தர்மன் சண்முகரத்னம் இன்று பொறுப்பேற்கவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதி மந்திரி, கல்வி மந்திரி, துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.