Thursday, January 23, 2025
HomeLatest Newsதிடீரென சரிவடைந்த டெஸ்லா பங்குச்சந்தை பெறுமதி!

திடீரென சரிவடைந்த டெஸ்லா பங்குச்சந்தை பெறுமதி!

சீனாவின் டெஸ்லா நிறுவனத்தின் model y மற்றும் model 3 வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நாட்டில் மக்கள் வாகனங்களை கொள்வனவு செய்வது குறைவடைந்து வரும் நிலையில் 9 வீதம் வரையில் இந்த வாகனங்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

கடந்த திங்கட்கிழமை இந்த அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் மேற்கொண்டு இருந்தது. இந்த வருடத்தில் முதல் முறை டெஸ்லா நிறுவனம், சீனாவில் வாகனங்களின் விலையை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் சீனாவில் பங்குச்சந்தை நிலவரம் மிகவும் சரிவடைந்து இருப்பதாக டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் கூறியிருந்தார்.

அத்தோடு இந்த திங்கட்கிழமை, டெஸ்லா நிறுவன பங்குகளின் பங்குச்சந்தை பெறுமதி 1.5 வீதம் வீழ்ச்சியடைந்து இருந்ததாகவும் அறியப்பட்டுள்ளது. எவ்வாராயினும் நிறுவனம் இந்த பங்குச்சந்தை மாற்றங்களால் பாதிக்கப்படாத அளவிற்கு திடமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய விரும்புவதாக எலன் மாஸ்க் தெரிவித்திருந்தார்.

Recent News