Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsரஷ்ய படையில் அதிபயங்கர ஏவுகணைகள் - கதிகலங்கும் நாடுகள்..!

ரஷ்ய படையில் அதிபயங்கர ஏவுகணைகள் – கதிகலங்கும் நாடுகள்..!

ரஷ்யாவினுடைய அதிபயங்கர ஏவுகணைகள் என்று அழைக்கப்படுகின்ற சர்மாட் ஏவுகணைகள் தற்போது ரஷ்ய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா மீது மோத நினைக்கும் எந்தவொரு நாட்டையும் ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்க வைக்கும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினால் வருணிக்கப்பட்ட இந்த ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் கொண்டது.

நவீன தொழில்நுட்பங்களை கொண்ட அபாயகரமான பல்வேறு ஆயுதங்களை ரஷ்ய உருவாக்கி வருவதாக கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அந்த ஆயுதங்களின் பிரத்தியேகமான செயற்திறன்களையும் பட்டியலிட்டார்.

அதில் ஒன்றான சர்மாட் ஏவுகணைகள் நேட்டோ அமைப்பால் சாத்தன் என்று அழைக்கப்படுகின்ற ரஷ்யாவின் R – 36 ரக ஐசிபிஎம் ஏவுகணைக்கு மாற்றாக படைகளில் சோ்க்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையமான
ராஸ்காஸ்மாஸின் தலைவா் யூரி போரிசொவ், கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன சா்மாட் ஏவுகணைகள் ராணுவச் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.அவை, பயன்படுத்துவதற்கு தயாா் நிலையில் நிறுவப்பட்டுள்ளன என்று அறிவித்திருக்கின்றமையானது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Recent News