இரவு 11:14 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி அபாய எச்சரிக்கை ஏதும் இல்லை. யாரும் காயம் அடைந்ததாகவோ சேதங்கள் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல் எதுவும் இல்லை.தெற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு தீவின் மேற்கு கடற்கரையில் புதன்கிழமை இரவு 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கொச்சி மற்றும் எஹைம் மாகாணங்களின் சில பகுதிகளில் நிலநடுக்கம் 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அதன் மையப்பகுதி கியுஷு மற்றும் ஷிகோகு தீவுகளைப் பிரிக்கும் புங்கோ கால்வாய் பகுதியில் இருந்ததாகவும் அந்நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது.மேற்கு ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஷிகோகு அணுமின் நிலையத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.