நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கை திரும்பிய முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் மீண்டும் அரசியலில் இறங்குவார் என பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.
இவ்வாறான நிலையில் கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வர விரும்பினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவோ அல்லது வேறு யாரோ இதுவரையில் அவ்வாறான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், கோத்தபாய ராஜபக்சவுக்கு பாராளுமன்றத்திற்கு வருவதில் நம்பிக்கை இல்லை எனவும் கட்சிக்குள் அவ்வாறான பேச்சுக்கள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருவார் என்ற வதந்தி சமூக வலைதளங்களால் பரப்பப்பட்ட பொய்யாக இருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கோட்டபாய ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டால் நாட்டில் மீண்டுமொரு குழப்பநிலை உருவாகக்கூடிய நிலை தோன்ற வாய்ப்புள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.