Wednesday, December 25, 2024
HomeLatest Newsகைநழுவிய போனுக்காக 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்

கைநழுவிய போனுக்காக 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்

மேற்கு துருக்கியில் 15 வயது சிறுமி ஒருவர் செல்ஃபி எடுத்து கொண்டிருந்த போது கைநழுவிய செல்போனை பிடிக்க முயன்று மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

துருக்கியின் முகலா(Mugla ) மாகாணத்தில் உள்ள ஒர்டகா (Ortaca) நகரில் மெலிக் கன் கனவுஸ்லர்(15) என்ற சிறுமி மாடியில் நின்று செல்பி எடுத்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது தனது கையில் இருந்து நழுவிய செல்போனை பிடிக்க முயன்று தனது சமநிலையை இழந்த மெலிக் கன் கனவுஸ்லர்(15) 40 அடி உயரத்தில் இருந்து தரையில் பயங்கரமாக மோதி விழுந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ உதவி குழு மற்றும் பொலிஸார் போதிய முதலுதவி சிகிச்சை அளித்தனர், விபத்தின் தாக்கம் பலமாக இருந்ததால் முகலா நகரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கனவுஸ்லர் மாற்றப்பட்டார்.

இருப்பினும் உயிருக்கு போராடி வந்த மெலிக் கன் கனவுஸ்லர் (Melike Gun Kanavuzlar) 18 நாட்களுக்கு பிறகு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மெலிக் கன் கனவுஸ்லரின் சோகமான மரணத்தின் செய்தி அவரது குடும்பத்தினரையும் அவரது நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மெலிக்கின் வீதியில் நின்று கொண்டிருக்கும் மனிதரின் அருகில் 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழும் காட்சிகள் நான்கு மாடிக் கட்டிடத்தை சுற்றியுள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.

Recent News