Friday, November 15, 2024
HomeLatest Newsமாணவர்களின் கல்வி தாகத்தினை தீர்க்க உயிரை பணயம் வைக்கும் ஆசிரியர்கள்..!முக்கிய நாட்டில் சோகம்..!

மாணவர்களின் கல்வி தாகத்தினை தீர்க்க உயிரை பணயம் வைக்கும் ஆசிரியர்கள்..!முக்கிய நாட்டில் சோகம்..!

மாணவர்களிற்கு கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் உயிரை பணயம் வைத்து மிதந்து சென்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்களே இவ்வாறு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்கள் பள்ளிக்கு செல்வதற்காக 46 மீட்டர் அகலமான குனார் நதியின் கரையை கடப்பதற்கு பாலம் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இதனால், ஆசிரியர்கள் காற்று நிரப்பப்பட்ட டியூப்பின் உதவியுடன் ஆற்றினை கடக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் அமைந்து இருக்கும் இந்த பள்ளியில் 1,040 மாணவர்கள் கல்வி கற்பதுடன், அதில் தொடக்க கல்வியை பயிலும் மாணவிகளும் உள்ளடங்குகின்றனர்.

மேலும் அங்குள்ள பள்ளி கட்டடங்கள் பயன்படுத்தும் நிலையில் இல்லை என்றும் மோசமான நிலையில் காணப்படுவதாகவும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் கிடைப்பதில்லை என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Recent News