Thursday, December 26, 2024
HomeLatest Newsவரி அதிகரிப்பு – நாட்டில் மூடப்பட்டும் அரிசி ஆலைகள்!

வரி அதிகரிப்பு – நாட்டில் மூடப்பட்டும் அரிசி ஆலைகள்!

தென் மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் அடங்கலாக 50 அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக சிவப்பு அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் அண்மையில் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அதிகரிக்கப்பட்டது.

இதன்காரணமாக அரிசி கிலோ ஒன்றுக்கு 5 ரூபா வரி அறவிடப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் நிமல் சிறி தெரிவித்துள்ளார்.

இதனால் தாம் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான உரிய தீர்வு அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படாவிட்டால் அரிசி ஆலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என தென் மாகாண சிவப்பு அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் நிமல் சிறி தெரிவித்துள்ளார்.

Recent News