Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsநடுவானில் கம்பீரமாக ஒலித்த தமிழ் - எழுந்த கரகோசங்கள்..!

நடுவானில் கம்பீரமாக ஒலித்த தமிழ் – எழுந்த கரகோசங்கள்..!

விமானி ஒருவர் தமிழில் கவிதை வாசித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அன்னையர் தினமாகிய கடந்த மே 14 ஆம் திகதி சென்னை – மதுரை செல்லும் விமானத்தில், விமானி ஒருவர் தாய்மார்களை வாழ்த்தி கவிதை வாசித்த காணொளி, இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரியா விக்னேஷ் என்ற இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழில் அறிவிப்புகளை வழங்கிய இவரது காணொளிகள் வைரலாகி அப்போது பிரபலமானார்.

கடந்த 14 ஆம் திகதி மதுரை- சென்னை செல்லும் இண்டிகோ விமானம் புறப்பட தயாராகும் வேளையில்,
பிரியா விக்னேஷ் புன்னகையுடன், தாய்மார்களை போற்றும் வகையில் கவிதை வாசித்துள்ளார்.அதனை அங்குள்ள பயணிகள் அனைவரும் ஆர்வமாக காணொளி எடுத்துள்ளனர்.

பிரியா விக்னேஷ் கவிதை வாசித்து முடித்ததும், பயணிகள் அனைவரும் கரகோசம் எழுப்பி அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதன் போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் அதனை பிரியா விக்னேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது 81,000 அதிகமானோர் அந்த காணொளியை பார்த்துள்ளதுடன், ‘அருமையான கவிதை’, மற்றொருவர் ‘தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்கள்’ எனவும் இணையவாசிகள் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் இந்த காணொளியை தனது அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து‘தனது தாயை பற்றி எங்கள் விமானியின் அருமையான கவிதையால், பயணிகள் மனமுருகி விட்டனர்’ என பதிவிட்டுள்ளனர்.

Recent News