ஒன்றாக இணைந்து செயற்பட்ட அரசியல் கட்சி தற்பொழுது இரு வேறு அணிகளாக பிரிந்து அவற்றுக்குள் அதற்கு யார் தலைவன் என்று அடிபடுவதாகவும் இவர்கள் இருக்கும் வரை தமிழர்களிற்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெற்றது என்பதால் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய வாழ்வுரிமை கழகத்தின் தலைவர் சிவகரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
உலகில் 80 நாடுகளில் தொழிலாளர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கையில் 1922 ஆம் ஆண்டு குணசிங்க என்பவரால் முதன் முதலில் கொண்டாடப்பட்டது.
இலங்கை தொடக்கம் உலகநாடுகள் வரை மதவாதம்,இனவாதம், நிறவாதம் மற்றும் சாதியவாதம் என்று பலதரப்பட்ட வாதங்களிற்குள் சிக்கி தவிக்கும் நிலையே காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையிலே நாடு தொடக்கம் ஒரு குடும்பம் வரையிலும் அடக்கு முறைகளும் , ஒடுக்குமுறைகளையும் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து விடுபடுவதற்கு நாம் முயற்சி செய்யவில்லை.
கட்சிகளிற்குள் சுருங்கி விட்ட மே தினமும் தொழிலார்களின் உரிமைகளை பொருட்படுத்தவே இல்லை.
பள்ளிக்கூடமே செல்லாத ஆசிரியர் ஒருவர் தொழிற்சங்கவாதியாக போராடியிருந்தார். இவ்வாறு தான் இன்றைய தொழிற்சங்கங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறாக உணர்வுகளையும், உரிமைகளையும்,உழைப்புகளையும் அடகுவைத்து விட்டு வாழும் மக்களிடம் மென்மேலும் சுரண்டலில் ஈடுபட்டு பொருளாதாரத்தினை மேன்படுத்த வேண்டும் என்ற சமூக கட்டமைப்பாக மனித சமூகம் தன்னை தகவமைத்தே வருகின்றது.
நாடு நாளுக்கு நாள் தொழிநுட்ப ரீதியாக பல்வேறு வளர்ச்சியடைந்து வரும் சூழலில் சகோதரதுவ ரீதியிலே, சமத்துவ ரீதியிலே எமது சமூகம் கட்டியெழுப்பபடவில்லை. மாறாக சுரண்டல் , போட்டி பொறாமை போன்ற பிறழ்வுகள் மூலமே முன்னோக்கி செல்கின்றது.
மே தின கூட்டங்களும் அரசியல்கட்சிகளின் கொள்கைகளை பரப்புவதுடன், தமது கட்சிகளில் ஆட்களை சேர்க்கும் விடயமாகவே தற்பொழுது மாற்றமடைந்துள்ளது.
எதிர்விட்டு ஏகாம்பரத்தின் மனைவி கனகாம்பரம் கூறிக்கொண்டார் பின்வீட்டு பீதாம்பரத்தின் மனைவியை பிடிக்கதென இது போன்றே எமது தமிழ் அரசியல் கட்சிகளின் கொள்கைகளும், எண்ணங்களும் உள்ளன.
எமது தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லாம் சித்திரையில் பிறந்தார்கள் என்று சித்திரையில் புத்திரன் பிறந்தால் குடி கெடும் என்ற ஒரு கேள்விக்கு எமது தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லாம் சித்திரையிலா பிறந்தார்கள் என்று ஒருவர் பதில் வழங்கி இருந்தார். அது தற்பொழுதும் பொருந்த கூடிய பதிலாகவே காணப்படுகின்றது.
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மோசமாக தோல்வியுற்ற ஒரு கட்சிக்குள் பிளவு. 20ஆண்டுகளாக ஒன்றாகவிருந்த அவர்கள் இப்பொழுது இரண்டாக பிரிந்துள்ளனர்.
பிரிந்த இரு கட்சிகளிற்குள்ளும் அதற்கு யார் தலைவன் என்ற போட்டி வேறு. இவ்வாறு இருந்தால் தமிழர்களை யார் காப்பாற்றுவது? நீதி கிடைக்கபோவதுமன்று. தங்களை தாங்கள் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்களை விரட்டியடிக்க வேண்டும்.
அண்மையில் கதைவடைப்பினை மேற்கொண்டிருந்தார் . இதனால் எந்த தீர்வுகளும் கிடைக்கபோவதன்று. 70 ஆண்டுகளாக கிடைக்கப்பெறாத தீர்வா இதன் மூலம் கிடைக்கபோகின்றது.
ஆகவே நீங்கள் காதவடிகின்ற காரணங்களை மேற்கோள்கட்டி மக்களை திரட்டி போராடுங்கள்.
தொல்லியல் திணைக்களம், வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும்ம் பௌத்த விகாரைகள் போன்றவை அமைக்கப்பட்ட தமிழிர்களின் நிலங்களின் நிலவரம் தான் என்ன? இதிலும் ஆக கேவலம் காணாமல் போனோர் தகவலோ அல்லது அரசியல் கைதிகளின் தகவலோ தெரியாதவர்கள் இதனை எவ்வாறு கூறுவார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அத்தோடு அவர்கள் விசேடமாக கை, கால் உயர்த்தும் பொழுதும் வருமானங்களை பெறுவார்கள்.
ஆகையால், தாம் தொடர்ந்தும் பாராளுமன்றம் செல்லவேண்டும் என்பதற்காக மக்களை காலத்திற்கும் வாக்காளர்களாகவே வைத்திருக்க முயற்சிக்கின்றனர்.
நான் கூறி வருவதை போன்று 2020 ற்கு பின்னர் தாயகம் பேசிடும் தன்னார்வம் நிறைந்த வடக்கு கிழக்கு என்பதற்கு இப்பொழுது இடப்பட்டுள்ளது.
ஆலயங்கள், நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றம் போன்ற இடங்களில் ஆறாம் இல்லை எனவும் தெரிவித்தார்.