Saturday, January 25, 2025
HomeLatest Newsமோடியை நேரில் சந்தித்துப் பேச தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்கள் டில்லி பயணம்?

மோடியை நேரில் சந்தித்துப் பேச தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்கள் டில்லி பயணம்?

தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இந்தியா செல்லக்கூடும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு இந்தியாவின் தலையீட்டைக் கோரி தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிமொன்றை அனுப்பி இருந்தன.

இந்தக் கடிதம் உட்பட அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாகக் கலந்துரையாடவே தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் புதுடில்லி செல்லவுள்ளனர்.

இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருகின்றது.

புதுடில்லி செல்லும் திட்டம் இரு தடவைகள் பிற்போடப்பட்டன. எனினும், ஆகஸ்ட் மாதளவில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதற்கான சாத்தியம் அதிகம் எனவும் இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

Recent News