தைப்பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்றையதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொங்கல் பண்டிகையையொட்டி, ‘சாதி மத வேறுபாடுகளின்றித் தமிழர் ஒன்றிணைந்து கொண்டாடும் சமத்துவத் திருநாளில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்.’ என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினரோடு கொண்டாடியுள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் கருணாநிதி திருவுருவப் பட்டத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரீனா கடற்கரை சென்று பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்திலும் தனது குடும்பத்தினரோடு மரியாதை செலுத்தினார்.இதையடுத்து, பொங்கல் பண்டிகையை காவல்துறையினரோடு முதல்வர் ஸ்டாலின் கொண்டாடினார்.
அவருடன், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சரும், அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.