Friday, January 24, 2025
HomeLatest Newsதமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்- பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு..!

தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்- பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு..!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்றைய தினம் (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான பணிகளே தற்சமயம் தொடங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களை அண்மித்து காணப்படும் விடைத்தால் திருத்தும் நிலையங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பங்கள் போதிய அளவில் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அந்த பணிகளை தொடங்குவது குறித்தும் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Recent News