Thursday, January 23, 2025
HomeLatest Newsதமிழ் பெண்ணை அடிமையாக்கி சித்திரவதை..! இலங்கைத் தம்பதிக்கு நீதிமன்றம் அதிரடி..!

தமிழ் பெண்ணை அடிமையாக்கி சித்திரவதை..! இலங்கைத் தம்பதிக்கு நீதிமன்றம் அதிரடி..!

தமிழ் பெண்ணை அடிமையாக வைத்திருந்து கொடுமைப்படுத்திய இலங்கை தம்பதிகளிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனை, ஆஸ்திரேலியாவின் மவுண்ட் வேவர்லி பகுதியில் வசிக்கும் சேர்ந்தவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட 53 வயதான குமுதினி என்பவரிற்கும் 57 வயதான கந்தசாமி என்பவருக்குமே வழங்கப்பட்டுள்ளது.

தம்பதிகள் இருவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவரை 8 ஆண்டுகளாக வீட்டில் அடிமையாக வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

இது தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில், தம்பதி மீது 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், விக்டோரியா கவுன்டி நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது வந்துள்ளது.

அந்த வகையில், தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டமையால் குமுதினிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது கணவருக்கு 6 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் சாட்சி அளிக்கக்கூடாது என பாதிக்கப்பட்ட பெண்ணிடம் குமுதினி அச்சுறுத்தியுள்ளார்.

அதனால், அது குறித்து பொலிஸார் வேறு ஒரு வழக்கினை பதிவு செய்தமையால், தற்பொழுது அந்த வழக்கில் குமுதினிக்கு கூடுதலாக இரண்டரை ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News