Wednesday, December 25, 2024

பாக்கிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த தலிபான்கள்!

தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஆப்கானிஸ்தானின் வான்பரப்பு எல்லைகளில் அமெரிக்க ட்ரோன் விமானங்கள் நேற்றைய தினம் பறந்ததாகவும் இந்த பறத்தலுக்கு பாக்கிஸ்தான் அனுமதியளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து தலிபான்கள் பாக்கிஸ்தானுக்கு கடுமையான எச்சரிப்பொன்றை விடுத்திருக்கின்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தற்போது தலிபான்களின் உத்தியோகபூர்வ கட்டுப்பாட்டில் இருக்கின்றது. எமது அனுமதியின்றி பாக்கிஸ்தான் எவ்வாறு அமெரிக்க ட்ரோன்களை எமது வான் பரப்பு எல்லைகளுக்குள் நுழைவதற்கு அனுமதியளிக்க முடியும். இந்த செயல் பாக்கிஸ்தானின் இறையாண்மையை மீறும் செயல் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாக்கிஸ்தான் இந்த செயற்பாட்டிற்கு விரைவில் எமக்கு விளக்கம் தர வேண்டும் என தலிபான்கள் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்திருக்கின்றதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Videos